இந்தியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது - கனடா பகிரங்க குற்றசாட்டு.. கேள்விக்குறியாகும் இந்தியா - கனடா உறவுகள்.!



Canada Says India Second Biggest Foreign Democracy 


கனடாவில் குடியேறி, அங்கிருந்து இந்திய அரசுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்து தனி நாடு கேட்கும் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் மிரட்டல் சம்பவங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய அரசும் தனது குடிமக்களை காக்க பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. 

காலிஸ்தானிய ஆதரவாளர்கள் கொலை

இதனிடையே, கனடா நாட்டில் காலிஸ்தானிய ஆதரவாளர்கள் பலரும் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வரும் நிலையில், அக்கொலைகளுக்கும் - இந்திய அரசுக்கும் தொடர்ப்பு இருப்பதாக கனடா பகிரங்க குற்றசாட்டு முன்வைத்து வருகிறது. அந்நாட்டில் குடியேறி அரசியல் அதிகாரத்தை பெற்று வரும் சீக்கியர்கள், தொடர்ந்து தங்களின் அழுத்தத்தால் கனடா அரசை சர்ச்சையான கருத்துக்களை பொதுவெளியில் முன்வைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

இந்தியா மீது குற்றசாட்டு

இந்த விவகாரத்தில் அமெரிக்கா இரண்டு நாடுகளுக்கும் சாதக-பாதமாக பேசாமல் அமைதிகாத்து வருகிறது. இதனிடையே, கனடா நாட்டின் மக்களவையில் இந்தியாவுக்கு எதிரான குற்றால மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது, கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களை குறிவைக்கும் இந்திய அரசின் தலையீடு என்பது அதிகரித்து இருக்கிறது. சீனாவுக்கு பின் கனடா நாட்டுக்கு அச்சுறுத்தலை தரும் நாடாக இந்தியா இருக்கிறது என கனடாவின் நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: என்னா வெயிலு.. வெப்ப அலையில் இருந்து மக்களை பாதுகாக்க ஜப்பானில் என்ன செய்றாங்க தெரியுமா? அசத்தல் வீடியோ உள்ளே.! 

ஏற்கனவே இந்தியா - கனடா இடையேயான உறவுகள் தொடர்ந்து கேள்விக்குறியாகி வரும் நிலையில், தற்போது கனடா நாடாளுமன்ற நிலைகுழுவின் வாதம் இரண்டு நாட்டுக்கு இடையேயான ராஜாங்க ரீதியிலான உறவுகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதையும் படிங்க: நடுரோட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட ஆடுகள்; பதறவைக்கும் காட்சிகள்.!