என்னா வெயிலு.. வெப்ப அலையில் இருந்து மக்களை பாதுகாக்க ஜப்பானில் என்ன செய்றாங்க தெரியுமா? அசத்தல் வீடியோ உள்ளே.! heat-reduce-method-in-japan-CDCURY

 

2024 கோடைகாலம் என்பது ஆசிய நாடுகளில் உள்ள மக்களால் மறக்க இயலாத வண்ணம் அமைந்துள்ளது. மார்ச் மாதத்தின் இறுதிப்பகுதியில் இருந்து சுட்டெரிக்க தொடங்கிய கடும் வெயில், இன்று வரை மக்களை வாட்டி வதைத்து வருகிறது. 

வெப்ப அலையால் அவதி

இந்தியா, சீனா, மியான்மர், வங்கதேசம் உட்பட பல நாடுகளில் வெப்பம் 40 டிகிரியை கடந்து பதிவானது. வெப்ப அலையின் காரணமாக வடமாநிலங்களில் அதிக மரணங்களும் ஏற்பட்டு இருக்கிறது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க பல விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நடுரோட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட ஆடுகள்; பதறவைக்கும் காட்சிகள்.!

ராட்சத கூலர்கள்

இந்நிலையில், ஜப்பான் நாட்டில் அதிகரித்து வரும் வெப்பத்தை தணிக்க, ராட்சத அளவிலான பேன்களை ஏற்பாடு செய்துள்ள உள்ளூர் நிர்வாகம், இயந்திரத்தின் வாய்ப்பகுதியில் நீரை வெளியிட்டு குளிர்ச்சியை பரப்புகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: 4 மாதம் தாய்ப்பால் கொடுத்து தந்தையின் உயிர்காத்த மகள்; ரூ.200 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட ஓவியம்; வரலாறு இதோ.!