BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
21 பேரை சுட்டு கொன்ற இளைஞர்: சுற்றி வளைத்து சுட்டு வீழ்த்திய போலீசார்..!
பள்ளிக்குள் புகுந்து 21 பேரை சுட்டுக் கொன்ற இளைஞரை போலீசார் சுட்டு வீழ்த்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றுக்குள் 18 வயது இளைஞர் புகுந்து சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் 19 சிறுவர்கள் உள்பட 21 பேரை கொன்று குவித்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் அண்டை நாடான கடனாவில் டொரோண்டோ நகரில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு அருகே இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நடமாடி கொண்டிருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த 3 தொடக்கப்பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டன.

இதனை தொடர்ந்து காவல் அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்து சென்று துப்பாக்கியுடன் நடமாடிய நபரை சுற்றிவளைத்தனர். பின்னர் காவல்துறையினர் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.