இன்பசுற்றுலா சென்ற அழகுகலைஞருக்கு இப்படியொரு சோகம்.. பிளாஸ்டிக்காக மாறி இறுகிய முகம்..!Britton Beautician Face Change Bulgaria Beach Rest

கடற்கரையில் 21 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் உறங்கிய பெண்ணுக்கு முகம் இறுகி பிளாஸ்டிக் போல மாறியுள்ளது.

பிரிட்டன் நாட்டினை சார்ந்த பெண்மணி சீரின் முராத் (வயது 25). பியூட்டீஷியனாக பணியாற்றி வருகிறார். இவர் தனது விடுமுறை நாளினை இன்பமாக கொண்டாட பல்கெரியா நாட்டிற்கு சென்றுள்ளார். பல்கெரியாவில் இருக்கும் பல சுற்றுலாத்தலங்களுக்கு சென்ற பெண்மணி இன்பமாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், அங்குள்ள கடற்கரையில் சீரின் 30 நிமிடங்கள் சூரிய ஒளியில் ஓய்வெடுத்துள்ளார். சுமார் 21 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் அவர் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்த நிலையில், அவரின் முகத்தில் திடீரென இறுக்கம் ஏற்பட்டு, நெற்றி பிலாஸ்டிக் போல மாறியுள்ளது.