பிரேசிலில் கடும் வெயில் அலை: 100 டால்பின்கள் இறந்து கரையொதுங்கும் சோகம்.!

பிரேசிலில் கடும் வெயில் அலை: 100 டால்பின்கள் இறந்து கரையொதுங்கும் சோகம்.!



Brazil Amazon River Lake 100 Dolphin Died 

 

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் பகுதியில், கடல் நீரின் வெப்பமானது வரலாற்றில் இல்லாத அளவு கடுமையாக உயர்ந்து வருகிறது. 

தற்போது அந்நாட்டின் வறண்ட வெயில் காலம் என்பதால், பிரேசிலில் இருக்கும் பல ஏரிகளில் வெப்பம் கடுமையான அளவு உயர்ந்துள்ளது. 

அதாவது, 102 பேரன் ஹீட் வெப்பம் நிலவுவதாக நிலவி வருகிறது. இக்காலங்களில் டால்பின்கள் அமேசான் நதி வழியே பிரேசிலில் உள்ள ஏரிகளை நோக்கி இயற்கையாகவே செல்லும். 

தற்போது வரலாற்றில் இல்லாத அளவு ஏரிகளில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதால், ஏரிகளை தேடிச்சென்ற டால்பின்கள் அடுத்தடுத்து உயிரிழக்க தொடங்கியுள்ளன.

கடந்த 2 முதல் 3 வாரத்திற்குள் மொத்தமாக 100 டால்பின்கள் கடுமையான வெப்பம் காரணமாக உயிரிழந்து இருக்கின்றன.