உலகம்

ஆற்றில் குளிக்கும்போது 10 வயது சிறுமியின் தலைக்குள் நுழைந்த கொடூரம்.! தீவிரமாக போராடும் மருத்துவர்கள்!!

Summary:

brain eating amepa attacking 10 year girl

டெக்சாஸ் மாகாணம், போர்ட் ஒர்த் பகுதியில் வசித்து வந்தவர் லிட்டில் லில்லி அவன்ட் என்ற. 10 வயது நிறைந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு அருகே உள்ள ப்ராசோஸ் என்ற ஆற்றுக்கு சென்று நீந்தி குளித்துள்ளார்.

இந்நிலையில் அந்த சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அன்று இரவே சிறுமியை அவரது குடும்பத்தினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி வைரஸ் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து சில நாட்களுக்கு பின்னர், சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இந்நிலையில் பெற்றோர்கள் சிறுமியை அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டது. அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி மூளை உண்ணும் அமீபாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

அதனை தொடர்ந்து கோமா நிலைக்கு சென்ற சிறுமிக்கு உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் சிறுமி அவ்வப்போது கண்திறந்து பார்ப்பதாகவும், ஆனால் அவரால் பேச முடியவில்லை எனவும் அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.


 


Advertisement