கொரோனா மருத்துவ பணிக்காக சென்று வீடு திரும்பிய தாய்.! கட்டிப்பிடித்து கதறிய மகன்.! கண்கலங்க வைத்த தாய்பாசம்..!



Boy embraces mother after her return from COVID-19

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் இதுவரை இந்தியாவில் மட்டும் மூன்று பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்நாட்டை சேர்ந்த மருத்துவர்களும், செவிலியர்களும் இரவு பகல் பாராமல் கடுமையாக பணியாற்றிவருகின்றனர். வைரஸ் உருவான சீனாவிலும் பல ஆயிரக்கணக்கான மருத்துவ ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக தங்கள் குழந்தைகள், உறவினர்களை பிரிந்து மருத்துவ பணியாற்றிவருகின்றனர்.

corono

இந்நிலையில், நீண்ட நாட்களாக தனது குடும்பத்தை பிரிந்து மருத்துவ பணியில் இருந்த பெண் ஒருவர் தனது மகனை சந்தித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சுமார் 29 நாட்களுக்கு பிறகு தாயும் - மகனும் சந்திக்கும் அந்த காட்சி பார்ப்போரை நெகிழவைத்துள்ளது.