உலகம்

#BREAKING#ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு! பலர் உயிரிழப்பு!

Summary:

bomb blast in sri lanka


ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் கிறிஸ்தவா்கள் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிராா்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் இலங்கை தலைநகா் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. 

ஈஸ்டா் திருநாளில் இலங்கை தேவாலயங்களில் குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது. 
இலங்கை தலைநகா் கொழும்புவில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றபோது குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், இதில் பலா் உயிாிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியாா் தேவாலயத்திலும், நீா்கொழும்புவில் உள்ள மற்றொரு தேவாலயத்திலும் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளன. அங்கு நடந்த குண்டுவெடிப்பில் பலர் இறந்துள்ளதாகவும், 250-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

பலி எண்ணிக்கை மேலும் உயரும் என கூறப்படுகிறது. மேலும், இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என அடுத்தடுத்து 6 இடங்களில் நடந்த பயங்கர குண்டுவெடிப்புகளில் 40 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 


Advertisement