ஐயோ பரிதாபம்... படகு கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 41 பேர் பலி.!

துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு சென்ற படகு கவிழ்ந்ததில் 41 அகதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து படகின் மூலம் இத்தாலியில் அகதிகளாக குடியேறுவதற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற படகு எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியது.
இந்த விபத்தில் சிக்கி நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவனை மால்டா நாட்டு சரக்கு கப்பலில் இருந்தவர்கள் காப்பாற்றி இத்தாலி கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 45 பேர் துனிசியாவில் இருந்து படகில் வந்ததாகவும் தங்களுடன் வந்த 41 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மூன்று பேர் குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக துனிசியாவில் இருந்து அதிகமான மக்கள் இத்தாலிக்கு சென்று அகதிகளாக குடியேறி வருகின்றனர்.