உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இருந்து கீழே தள்ளப்பட்டார் பில்கேட்ஸ்! அவரை கீழே தள்ளியது யார் தெரியுமா?

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இருந்து கீழே தள்ளப்பட்டார் பில்கேட்ஸ்! அவரை கீழே தள்ளியது யார் தெரியுமா?



bill-gates-down-in-world-rich-list


உலகின் பெரும்பணக்காரர்களின் பட்டியலை புளூம்பர்க் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸை அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ஏற்கனவே பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.

இந்தநிலையில் உலகின் பெரும்பணக்காரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த பில்கேட்ஸை, மூன்றாம் இடத்திற்கு தள்ளியுள்ளார் பிரான்ஸை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட். பிரான்ஸ் நட்டான் LVMH நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் 2-ம் இடத்தில் இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bill Gates

புளூம்பெர்க் வெளியிட பட்டியல்படி அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 125 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளுடன் முதலிடத்திலும், LVMH நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி பெர்னார்ட் 108 பில்லியன் டாலர் சொத்துக்களுடன்  2ஆம் இடத்திலும், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 107 பில்லியன் டாலர் சொத்துகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

2019-ல் மட்டும் சுமார் 39 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்தைச் சேர்த்திருக்கிறாராம் பெர்னார்ட் அர்னால்ட். உலகின் முதன்மையான 500 பணக்காரர்களிலேயே இந்த ஆண்டில் (வெறும் 6 மாதங்களில் மட்டும்) அதிக சொத்து சேர்த்தவர் இவர் தான் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.