உலகம்

பாலியல் பலாத்காரம் நடக்க இந்த பெண்கள்தான் காரணம், சர்ச்சையை கிளப்பிய ஜனாதிபதி.!

Summary:

பாலியல் பலாத்காரம் நடக்க இந்த பெண்கள்தான் காரணம், சர்ச்சையை கிளப்பிய ஜனாதிபதி.!

பெண்கள் அழகாக இருந்தால்,பலாத்கார வழக்குகள் அதிகரிக்கதான் செய்யும் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 தனது மோசமான கருத்துக்களால் அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர்,அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் ஜனாதிபதி ரோட்ரிகோ.

இந்நிலையில் ரோட்ரிகோவின் சொந்த ஊரான டேவோவில் அதிக பலாத்கார குற்றங்கள் நடைபெறுவது குறித்து செய்தியாளர்கள் அவர்களிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ரோட்ரிகோ அழகான பெண்கள் அதிகம் உள்ள இடங்களில் இதை போன்ற பாலியல் பலாத்காரங்கள்  அதிகமாகதான் இருக்கும் என கூறியுள்ளார்.

 இவரது கருத்துக்கு சர்வதேச மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதற்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் செய்தித்தொடர்பாளர் விளக்கமளிக்கையில் ஜனாதிபதி நகைச்சுவையாக கூறியத்தை ஏன் இவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்கிறீர்கள் என தெரிவித்துள்ளார் .
இவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 


Advertisement