அடேங்கப்பா.. நாய்கள் பயணம் செய்ய தனித்துவ விமான சேவை; ஒரு டிக்கெட்டின் விலை இத்தனை இலட்சமா?.! 



Bark Air launches dog friendly flight

 

உலகில் முதன்முறையாக நாய்கள் பயணம் செய்யும் வகையில் பல வசதிகளுடன் தனித்துவமான விமான சேவையை பார்க் ஏர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் நாய்களுக்கு என சௌகரியமான இருக்கை, படுக்கை வசதி, டயப்பர்களும் வழங்கப்படுகிறது. 

நாய்களுடன் உரிமையாளரும் பயணம்

விமான சேவையில் நாய்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும், அதற்கு துணையாக உரிமையாளரும் பயணம் செய்யும் வகையில் விமானமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அலட்சியமான செயல்.! நொடிப் பொழுதில் விமானத்தில் இருந்து கீழே விழுந்த ஊழியர்.! வைரலாகும் ஷாக் வீடியோ!!

flight

மேலும் ஒவ்வொரு விமானத்திலும் 15 நாய்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் பயணம் செய்யலாம். தற்போது நியூயார்க் - லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் - லண்டன் இடையே இந்த விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. 

ஒரு டிக்கெட்டின் விலை

ஒரு டிக்கெட்டின் விலை உள்நாட்டு பயணத்திற்கு 6000 டாலர் இந்திய மதிப்பில் ரூ.4,98,352, வெளிநாட்டு பயணத்திற்கு 8000 டாலர் இந்திய மதிப்பில் ரூ.6,64,470 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

இதையும் படிங்க: தேன் கூட்டில் நடந்த டிஸ்கோ டான்ஸ்; வியக்கவைக்கும் அதிர்ச்சி உண்மை.. நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.!