தந்தையை குத்தி கொன்ற மகன் - பீடி கொடுக்காததால் பாடையில் ஏற்றினார்.!

அசாம் மாநிலத்தில் உள்ள பர்பெட்டா மாவட்டம், அலிப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் லாலமியா (வயது 50). இவரின் மகன் சம்சுல் ஹோக் (வயது 30). நேற்று லாலமியா பீடி புகைத்துக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, அருகே இருந்த மகன் சம்சுல் ஹோக் தனக்கும் பீடி புகைக்க தருமாறு தந்தையிடம் கேட்டுள்ளார். தந்தையும் ஒரு பீடியை கொடுத்த நிலையில், அதனை விரைந்து பிடித்துவிட்டு மற்றொரு பீடி புகைக்க கேட்டுள்ளார்.
முதலில் பீடி கொடுத்த தந்தை மீண்டும் அதனை தர மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த சம்சுல் ஹோக் தந்தையுடன் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் இருவரிடத்திலும் கைகலப்பை ஏற்படுத்தவே, ஆத்திரமடைந்த சம்சுல் ஹோக் கத்தியால் தந்தை லாலமியாவை குத்தி இருக்கிறார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் லாலமியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சம்சுல் ஹோக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.