அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.! டொனால்ட் ட்ரம்பை பின்னுக்கு தள்ளிய ஜோ பைடன்.!

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.! டொனால்ட் ட்ரம்பை பின்னுக்கு தள்ளிய ஜோ பைடன்.!


america vote counting

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், 270 இடங்கள் வென்றால் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில், இரு கட்சிகளுக்கிடையே போட்டி நீடித்து வருகிறது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபிடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் புளோரிடா மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் இருந்தார், ஆனால் இப்போது ஜோ பிடன் முன்னிலையில் இருக்கிறார். இதனால் இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேசிய அளவில் பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் ஜோ பைடன், புளோரிடா, அரிசோனா, வடகரோலினா, விஸ்கான்சின், மிஷிகன், பென்சில்வேனியா ஆகிய தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் பல முக்கிய மாகாணங்களில் முன்னிலை வகித்து வருகிறார்.

America

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார்.  சற்று முன் வரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளை வைத்து பார்க்கும் போது, டிரம்ப்பிற்கு கடும் போட்டியாக ஜோ பிடன் இருந்து வருகிறார்.