உலகம்

சீரியஸாக அதை வாங்குவதை நிறுத்துங்கள்! கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்! சுகாதார அதிகாரி முக்கிய அறிவிப்பு!

Summary:

america surgeon general announcement about coronovirus

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் பல நாடுகளிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 2700க்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80000க்கும் அதிகமானோர்  பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உலக நாடுகளே பெரும் அச்சுறுத்தலில் உள்ளது.

இதனால் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் மக்கள் அனைவரும் எப்பொழுதும் முகத்தில் மாஸ்க் அணிந்தவாறே, வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் என்னும் பொறுப்பு வகிக்கும் Dr. ஜெரோம் ஆடம்ஸ் என்பவர் அமெரிக்க மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மக்களே மாஸ்குகளை வாங்குவதை நிறுத்துங்கள். மாஸ்குகள் கொரோனா பரவுவதை தடுக்கும் திறன் வாய்ந்தவை அல்ல. அதே நேரத்தில், நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் மருத்துவமனை ஊழியர்களுக்கு அவை கிடைக்காவிட்டால், அது நமது சமுதாயத்துக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.

அதுமட்டுமின்றி அவர் உங்களையும் உங்களை சார்ந்தவர்களையும் காப்பாற்றிக்கொள்ள, உடல் நலமில்லாவிட்டால் வீட்டுக்குள்ளேயே இருப்பதும், தினமும் கைகளை சோப்பினாலும் நீரினாலும் கழுவுவதும் போன்ற செயல்களே சிறந்த வழியாகும் எனவும் தனது தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளார்.

 


Advertisement