உலகம்

தயாராக இருங்க..! மூன்று படை தளபதிகளுடன் ட்ரம்ப் ஆலசோசனை.! உச்சகட்ட பதற்ற நிலை.

Summary:

America iron issue status update

கடந்த வாரம் ஈராக் நாட்டில் அமரிக்க ராணுவம் டிரோன் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதில் ஈரான் நாட்டின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு பதிலடி தரப்படும் என ஈரான் கூறிவந்த நிலையில் நேற்று காலை 12 ஏவுகணைகள் மூலம் அமெரிக்க விமானத்தளம் தாக்கப்பட்டது.

இதில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், இந்த தாக்குதலுக்கு அமேரிக்கா என்ன பதிலடி கொடுக்கப்போகிறது என உலகமே அச்சத்தில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைப் பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருக்கும் வார் ரூமில் மூன்று படை தளபதிகளுடனும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

மூன்று படைகளையும் தயார் நிலையில் இருக்குமாறு கூறியதாகவும், இன்று மாலைக்குள் அமெரிக்கா பதில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


Advertisement