மதுபோதையில் உல்லாசம்., உடைந்துபோன "அந்த" பொருள்.. இழப்பீடு கொடுக்காததால் பெண் கைது..!

மதுபோதையில் உல்லாசம்., உடைந்துபோன "அந்த" பொருள்.. இழப்பீடு கொடுக்காததால் பெண் கைது..!


America Florida 37 Aged Woman Arrested broke pub sink During Enjoy With Partner

கழிவறையில் மதுபோதையில் தம்பதியினர் உல்லாசம் மேற்கொள்ளும் போது, சிங்க் உடைந்துள்ளது. இதற்கு இழப்பீடு கொடுக்காமல் சென்ற தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். 

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை சார்ந்த பெண்மணி காத்ரின் ட்ராமெல் (வயது 37). இவர் சம்பவத்தன்று செமினோல் பகுதியில் உள்ள ஐரிஷ் பப்புக்கு, தனது ஆண் நண்பருடன் சென்றுள்ளார். அங்கு மதுபானம் அருந்திய இருவரும், உல்லாசமாக இருக்க முடிவு செய்துள்ளனர். 

இதன்போது, பெண்மணி பாத்ரூமில் உள்ள பாத்ரூமில் உள்ள சிங்கில் உல்லாசமாக இருக்கலாம் என்று கூற, ஆணும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தம்பதி இருவரும் உல்லாசமாக இருந்த நிலையில், சிங்க் உடைந்துள்ளது. இந்த சிங்க்கின் மதிப்பு 400 பவுண்ட்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.40,136) ஆகும். 

இந்த தகவலை பப் நிர்வாகத்திற்கு தெரிவிக்காமலேயே தம்பதி சென்ற நிலையில், விடுதி ஊழியர்கள் இதனை கவனித்து பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து தம்பதியை தேடி வந்தனர். 

America

கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி சம்பவம் நடந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டனர். போதையில் உல்லாசமாக இருந்த இருவரும், சிங்க் உடைந்ததற்கான விளக்கம் அல்லது இழப்பீடு தர தயாராக இல்லை. இதனால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், சொந்த ஜாமினில் இருவரும் வெளியாகினர். 

இதுகுறித்து, உள்ளூர் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்ட தகவலில், "புளோரிடா மக்கள் ரொமான்டிக்கான மக்கள். அவர்கள் எங்கும் உல்லாச தூண்டுதல் ஏற்பட்டால் அவர்களின் இஷ்டத்திற்கு செயல்படுவார்கள். அது இங்கு சாதாரணம். இவ்வழக்கும் இயல்பாக பதிவாகுவது தான்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.