ஓசோன் ஓட்டை மூடப்படுவது உறுதி - அமெரிக்கா தேசிய கடல் & வளிமண்டல நிர்வாகம்.!

50 ஆண்டுகளுக்குள் ஓசோன் ஓட்டை முற்றிலுமாக அடைக்கப்படும் என அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
உலகத்தை பாதுகாக்கும் ஓசோன் மண்டலம் கார்பன்-டை-ஆக்ஸைடு உட்பட பிற கரியமில வாயுக்கள் வெளியீடு காரணமாக சேதமடைந்தது. அதனுள் ஓட்டை விழுந்ததாகவும் ஆய்வாளர்கள் அறிவித்த நிலையில், பிற்காலத்தில் அதன் தேவையை உணர்ந்து ஓசோனை பாதுகாக்க பல்வேறு வழிமுறைகளை அறிவித்தனர்.
ஓசோனில் உள்ள ஓட்டையை அடைப்பது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு வந்தது. இந்த ஆய்வின் முடிவில் 50 ஆண்டுகளில் ஓசோன் ஓட்டை அடைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
கடந்த 1980 ஆண்டுடன் ஒப்பிடும்போது தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களின் செறிவு 50 % குறைந்துள்ளதால், 2070ம் ஆண்டுக்குள் ஓசோனில் ஏற்படு ஓட்டை மூடப்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். உலகளவில் அனைவரும் அதற்கான முயற்சியை எடுத்தால் நலமே.