ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
#BigNews: அமெரிக்காவில் கைக்குழந்தை உட்பட 4 பேர் என இந்திய குடும்பமே கொலை.. அதிரவைக்கும் சம்பவம்.!
8 மாத கைக்குழந்தை, தாய்-தந்தை, குடும்ப உறுப்பினர் என 4 பேரை கடத்தி கொலை செய்துள்ள அமெரிக்காரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சோஷியாபூர் மாவட்டம், ஹர்ஷிபைண்ட் கிராமத்தை சேர்ந்தவர் மருத்துவர் ரந்தீர் சிங். இவரின் மனைவி கல்வித்துறையில் பணியாற்றியவர். இருவரும் ஓய்வு பெற்றுவிட்டார்கள். தம்பதியின் மகன்கள் ஜஸிதீப் சிங், அமன்தீப் சிங்.
இவர்கள் இருவரும் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார்கள். கடந்த திங்கள்கிழமை ஜஸிதீப் சிங், அவரது மனைவி ஐஸ்லீன் கவுர், தம்பதியின் 8 மாத குழந்தை ரூஹி தேரி, அமந்தீப் சிங் ஆகியோர் கவுண்டியில் செயல்பட்டு வரும் வணிக வளாகத்திற்கு சென்றனர்.
அப்போது, துப்பாக்கி முனையில் மர்ம நபர்கள் இவர்கள் நால்வரையும் கடத்தி சென்றனர். மேலும், அவர்களின் செல்போன்களை பறித்து சாலையில் வீசியதால், அவர்கள் எங்கு கடத்தி செல்லப்பட்டார்கள் என்ற விபரம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், கடத்தப்பட்ட கைக்குழந்தை உட்பட நான்கு பெரும் கொலை செய்யப்பட்டு பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவலை கலிபோர்னியா காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர். குற்றவாளி குறித்த தேடல் நடந்து வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் சந்தேகத்திற்கு இடமான 48 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஆயுதக்கொள்ளை வழக்கில் 2005 ல் சிறைக்கு சென்றுள்ளார். அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய குடும்பம் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்வலையை ஏற்படுத்திஉள்ளது.