உலகம் லைப் ஸ்டைல்

பூமியில் ஏலியன்கள் வாழ்கிறார்கள்..! விண்வெளி வீராங்கனை கூறும் முக்கிய தகவல்..!

Summary:

Aliens are there first British astronaut explains

பூமியை தவிர மனிதனால் வேற்று கிரகங்களில் வாழ முடியுமா? மனிதர்களை போல் வேறு உயிரினங்கள் எந்த கிரகத்திலாவது வாழ்கிறதா? ஏலியன்கள் என்று அழைக்கப்படும் வேற்றுகிரக வாசிகள் உண்மைலையே உள்ளார்களா? இவை அனைத்திற்கும் விடை காண உலக நாடுகள் அனைத்தும் பெரும் முயற்சியும், ஆய்வும் செய்துவருகிறது.

இந்நிலையில் ஏலியன்கள் இருக்கிறார்கள், அவர்கள் பூமியில் கூட நம்மை சுற்றி அவர்கள் வாழ வாய்ப்புள்ளது என பகீர் கிளப்பியுள்ளார் பிரிட்டனின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான ஹெலன் ஷர்மான்.

இதுபற்றி அவர் கூறுகையில், வேற்றுகிரகவாசிகள் நிச்சயமாக வாழ்வது உண்மையே. இதில் எந்த சந்தேகமும் இல்லை. அண்டத்தில் பல கோடிக்கணக்கான கிரகங்கள், நட்சத்திரங்கள் உள்ளன. இதில் நிச்சயம் ஏதாவது ஒன்றில் மனிதர்களை போல் வேறு உயிர்கள் நிச்சயம் வாழ்கிறது.

மனிதர்களைப் போல் கார்பனும் நைட்ரஜனும் நிறைந்து இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் வாழ்வதற்கான அறிகுறிகள் உள்ளன. ஏலியன்கள் இல்லை என்று நிச்சயம் சொல்ல இயலாது என கூறியுள்ளார் ஹெலன்.


Advertisement