உலகம்

30 வருடங்கள் கழித்து சந்தித்த பள்ளி நண்பர்கள்.! ஒரு நொடிப்பொழுதில் நிகழ்ந்த சோகம்..

Summary:

After 30 years friends all meet togathered with in few minutes happened bad expreance

வியட்நாம் நாட்டின் குவாங் பிங்ஹ் மாகாணத்தில் டாங் ஹூ என்ற  உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் 1990 ஆம் ஆண்டு படித்த 40 மாணவர்கள் தங்களது பள்ளி வகுப்பில் 30வது ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். அதன்படி நண்பர்கள் அனைவரும் சேர்ந்து சுற்றுலா செல்ல பிளான் செய்துள்ளனர். 

அதன்படி நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பேருந்து ஒன்றை வாடகைக்கு எடுத்து சுற்றுலா சென்றுள்ளனர். பேருந்தில் அவர்கள் சென்ற சில மணி நேரத்திலேயே கவிழ்ந்துள்ளது. அதில் பயணம் செய்த 13 நண்பர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 

அதனை அடுத்து தகவல் அறிந்து சென்ற உள்ளூர் போலீசார் மற்றும் மீட்புப்படையினர் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய நபர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 30 வருடங்கள் கழித்து சந்தித்த நண்பர்களுக்கு ஏற்பட்ட இந்த நிகழ்வு அனைவரின் மனதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

 


Advertisement