
A Zebra Had An Affair With A Donkey And Gave Birth To A Zonkey
இந்த உலகில் எத்தனையோ அதிசயங்கள் நடந்துவரும் நிலையில், கழுதைக்கும், வரிக்குதிரைக்கும் ஏற்பட்ட தொடர்பில் வரிக்குதிரை ஓன்று கழுதைபோல் உருவம் கொண்ட குட்டியை ஈன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவின் சாவோ கிழக்கு தேசிய பூங்காவில் இருந்து பெண் வரிக்குதிரை ஓன்று கடந்த வருடம் மே மாதம் தப்பி சென்றுள்ளது. தப்பித்துச்சென்ற வரிக்குதிரை அருகில் இருந்த பகுதியில் மறைந்துகொண்டதை அடுத்து அந்த பகுதியில் இருந்த கழுதை ஒன்றுடன் வரிக்குதிரை கலப்பின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளது.
பின்னர் வனத்துறை ஊழியர்கள் அந்த குதிரையை தேடி கண்டுபிடித்து மீண்டும் பூங்காவிற்கு கொண்டுவந்துள்ளனர். இந்நிலையில், கழுதையுடன் கலப்பின சேர்க்கையில் ஈடுபட்ட பெண் வரிக்குதிரை கர்ப்பமான நிலையில், அந்த குதிரை சமீபத்தில் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது.
குதிரைக்கு பிறந்த குட்டியை பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கினர். காரணம், பிறந்த குட்டி பார்ப்பதற்கு வரிக்குதிரை போலவும், கழுத்தை போலவும் காட்சியளித்துள்ளது. தற்போது அந்த குதிரையை பராமரித்துவரும் வனவிலங்கு அறக்கட்டளை ஓன்று புதிதாக பிறந்த அந்த குட்டிக்கு சோங்கி (Zonkey) என பெயர் வைத்துள்ளது.
மேலும், புதிதாக பிறந்த குட்டியையும், அதன் தாயையும் அறக்கட்டளை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட இந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகியுள்ளது. மேலும், பார்ப்பதற்கு குதிரை போலவும், அதேநேரம் கழுதை போலவும், கால்களில் வரியுடன் இருக்கும் அந்த வித்தியாசமான குட்டி பார்ப்போரை ஆச்சரியப்படவைக்கின்றது.
Advertisement
Advertisement