வீட்டருகே அசால்ட்டாக உலாவிய ஏலியன்.. பதற்றதை கிளப்பிய அதிர்ச்சி வீடியோ வைரல்.!

வீட்டருகே அசால்ட்டாக உலாவிய ஏலியன்.. பதற்றதை கிளப்பிய அதிர்ச்சி வீடியோ வைரல்.!


A video of an alien roaming around the house has gone viral

நம்மிடையே தொழில்நுட்ப அதிகரித்து வந்த நாட்களில் இருந்து, வானியல் தொடர்பான பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அதேபோல, வேற்றுகிரக வாசிகள் என்று கூறப்படும் ஏலியன்கள் கட்டுக்கதையும் பல உலாவுகின்றன.

பறக்கும் தட்டுகள் வருகின்றன, மக்களை அவர்கள் கடத்தி சென்று ஆராய்ச்சி செய்து மீண்டும் விட்டுவிடுவார்கள் என்று பல கருத்துக்கள் கூறப்படுகின்றன.

 

இந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு திரையில் காட்சிப்படுத்தப்பட்ட ஏலியன் உருவத்தை ஒத்த மர்ம நபர், வீட்டின் அருகே நின்று அங்கும் இங்கும் செல்வது போன்ற வீடியோ பதிவாகியுள்ளது. இது மீண்டும் வைரலாகியுள்ளது.

இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் இல்லை. ஆனால், அதில் கருத்து தெரிவிப்பவர்கள் நிர்வாண ஆசாமி இரவு நேரங்களில் மக்களுக்கு போக்கு காண்பித்து இருக்கிறார் என விமர்சித்து வருகின்றனர்.