உலகம்

தள்ளாடும் வயதிலும் தாளம் போடும் பாட்டி.. வைரலாகும் வீடியோ.!

Summary:

பாரிஸ் நகரில் வசித்து வருபவர் 106 வயதான கொலாட் மேஸ் என்னும் மூதாட்டி. அப்பாட்டி தன்னுடைய த

பாரிஸ் நகரில் வசித்து வருபவர் 106 வயதான கொலாட் மேஸ் என்னும் மூதாட்டி. அப்பாட்டி தன்னுடைய தள்ளாடும் வயதிலும் பியானோ வசித்து பார்ப்போரை ஆச்சர்யப்படுத்தி வருகிறார். 106 வயது ஆன போது தளராது பியானோ வசித்து தனது 6வது இசை தொகுப்பை வெளியிட உள்ளார்.

இசை மீது அளவிள்ள ஆர்வம் கொண்ட அம்மூதாட்டி தன்னுடைய நான்கு வயது முதலே பியானோ வசித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் தன்னுடைய இன்ப, துன்பம் என அனைத்து நேரத்திலும் பியானோ வசித்து அதன்மூலம் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தற்போது அவ்வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் பாட்டிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement