உலகம்

ஒரே நாளில் 65 பேர் பலி! சீனாவை விடாமல் மிரட்டும் கொரோனா வைரஸ்

Summary:

65 died in one day at china

உலகையே அதிரவைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் சீனாவில் ஒரே நாளில் 65 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ் கடந்த இரண்டு வாரங்களாக சீன மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த கொடிய வைரஸால் இதுவரை சீனாவில் மட்டும் 590 பேர் பலியாகியுள்ளனர். 

மேலும் இதுவரை 24324 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கடுமையான தாக்குதலை சமாளிக்க முடியாமல் சீன அரசு தடுமாறி வருகிறது. இதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இருப்பினும் இதுவரை எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. இதற்காக புதிதாக தனி ஒரு மருத்துவமனையை மட்டும் கட்டியுள்ளது சீன அரசு. இந்நிலையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 65 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் மேலும் மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


Advertisement