உலகம் சினிமா

30000 டாலர் செலவு செய்து மைக்கேல் ஜாக்சன் போல மாறிய தீவிர ரசிகர்!

Summary:

22 year young boy changed his face like micheal jackson

மைக்கல் ஜாக்சனின் தீவிர ரசிகரான ஒரு இளைஞர் அவரைப் போலவே முக அழைப்பு வேண்டும் என்று விரும்பி பல முறை முகத்தில் அறுவை சிகிச்சை மேற்கண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜென்டினாவை சேர்ந்தவர் லியோ ப்லங்கோ என்ற 22 வயது இளைஞர் $30,000/- செலவில் பல்வேறு விதமான பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது முகத்தை மைக்கல் ஜாக்சன் போல் மாற்றி அமைத்திருக்கிறார்.

லியோவிற்கு தனது சிறு வயது முதல் மைக்கல் ஜாக்சன் மீதான ஒரு பிடிப்பு இருந்து வந்தது.தனது ஹீரோவைப் போல் தானும் இருக்க வேண்டும் என்பதற்காக இதுவரை 11 பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் இதர வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறார் லியோ.

ஆனால் அவருடைய இந்த மாற்றத்தில் இதுவரை அவருக்கு முழுமையான திருப்தியும், சந்தோஷமும் கிடைக்கவில்லை எனவும்,மேலும் அவர் முற்றிலும் மைக்கல் ஜாக்சன் போல் தான் தோற்றமளிக்கவில்லை என்ற உணர்வு அவருக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார். இன்னும் சில சர்ஜரிகள் செய்து அதனை முழுமை படுத்த வேண்டும் என்று அவர் விரும்புவதாகவும் தெரிவிக்கிறார்.

ஆனால் இவருடைய இந்த செய்கையால் இவரின் தாயார் மிகவும் வருந்துகிறார்.மேலும் லியோ, இன்னும் நிறைய மாறுதல்களை மேற்கொள்வதால் மட்டுமே முழுமையாக மைக்கல் ஜாக்சன் போல் மாற வேண்டும் என்ற கனவு நினைவாகும் என்றும் கூறுகிறார்.


Advertisement