தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
பாடாய்படுத்தும் பல வியாதிகளை, குணப்படுத்த இயற்கை வைத்தியம் இதோ.! வெறும் சாறே போதும்.!
ரத்த அழுத்த நோயை குணப்படுத்த அரைக்கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி காலை, மாலை இருவேளையும் கலந்து சாப்பிட்டு வருவது நல்ல பலன் கொடுக்கும்.
முசுமுசுக்கை சாறுடன் சீரகத்தை பொடியாக்கி சேர்த்து சாப்பிடும் போது அதுவும் ரத்த அழுத்தத்தை போக்க உதவுகிறது. அதுபோல பொன்னாங்கண்ணிக் கீரை சாறையும் சீரகப்பொடி சேர்த்து சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும்.
தேன், துளசி இலவங்கப்பட்டை ஆகியவற்றை இஞ்சியுடன் சேர்த்து கொதிக்க வைத்து கொடுப்பது தொண்டை கரகரப்பை நீக்க வல்லது. சுக்கு கீரை மற்றும் ஒரு கைப்பிடி அளவு துளசியை சேர்த்து கஷாயம் செய்து குடிப்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பெருங்காய பொடியை இஞ்சி சாறுடன் சேர்த்து குழைத்து வயிற்றின் மீது பற்று போடுவது வயிறு உப்புசத்தை குணப்படுத்தும். அசோக மரப்பட்டை மற்றும் சீரகம் இரண்டையும் பொடி செய்து வைத்துக் கொள்ளலாம். இதை அன்றாடம் காலை, மாலை வெந்நீரில் கலந்து குடிப்பது உடலை புத்துணர்ச்சியாக வைக்க உதவும்.
இஞ்சி சாரில் வெங்காயத்தை அரைத்து நெற்றியில் பத்து போடுவது தலைவலியை குணமாக்க உதவும். சளி தொல்லை நீங்க எலுமிச்சை பழச்சாறு ஒரு ஸ்பூன், தேன் இரண்டு ஸ்பூன், இஞ்சி சாறு ஒரு ஸ்பூன் கலந்து குடிப்பது நல்ல பலன் கொடுக்கும்.
ஆடாதொடையை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிடுவது இரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும். இஞ்சி, தேன், புதினா உள்ளிட்டவற்றை அரைத்து வடிகட்டி கொதிக்க வைத்து சாப்பிடுவதால் நரம்பு தளர்ச்சி குணமாகும். இஞ்சி மற்றும் புதினாவை துவையல் செய்து சாப்பிடுவது அஜீரண கோளாறு மற்றும் பித்தத்தை சரி செய்யும்.