13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
மாணவர்களுக்கு விஜய் சர்ப்ரைஸ் தருவாரா.? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
+2 தேர்வுகள் :
கடந்த மார்ச் 1-ம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு தொடங்கிய நிலையில், மார்ச் 22ஆம் தேதி வரை தமிழகத்தைச் சேர்ந்த 7.8 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதி இருந்தனர். இதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 83 மையங்களில் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை விடைத்தாள்கள் திருத்தப்பட்டது.
தேர்வு முடிவுகள் வெளியீடு :
இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியாகி உள்ள நிலையில், அதன்படி 96.44 சதவீத மாணவிகளும், 92 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களுக்கு பரிசு :
அந்த வரிசையில், நடிகர் விஜய் கல்வி மிகவும் முக்கியம் என்பதை அடிக்கடி வலியுறுத்தி வருவார். அது மட்டுமல்லாமல் சென்ற ஆண்டு அவர் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை மாவட்ட வாரியாக தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தன் கையால் நேரடியாக பரிசுகளை வழங்கினார்.
சர்ப்ரைஸ் தருவாரா?
இது மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்தால் நடிகர் விஜயை சந்திக்கலாம் என்று ஊக்குவிக்கும் விதமாக இருந்தது. இந்த ஆண்டு அவர் தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியையும் தொடங்கி இருக்கிறார். எனவே இந்த ஆண்டு தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவர்களுக்கு விஜய் சர்ப்ரைஸ் தருவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.