தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
குடிபோதையில், தாயிடம் தகராறு.. ஆத்திரத்தில் மண்டையை பிளந்து மரணத்தை கொடுத்த தாய்.!
மது போதைக்கு அடிமை :
மதுரை மாவட்டம் தும்மகுண்டு பகுதியில் வசித்து வரும் சிவசாமி என்ற நபருக்கு திருமணம் நடந்து விவாகரத்தாகி தனது தாய் பாண்டியம்மாள் என்பவருடன் வசித்து வந்துள்ளார். சிவசாமி மது போதைக்கு மிகவும் அடிமையானவர். அன்றாடம் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதை தனது வேலையாக செய்து கொண்டு இருப்பவர்.
தட்டிக்கேட்ட தாய் :
சம்பவ தினத்தன்று வழக்கம் போலவே சிவசாமி மூக்கு முட்ட மதுவை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அவரது நிலையை பார்த்து பாண்டியம்மாளுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. "இப்படி அன்றாடம் ஏன் குடித்துவிட்டு வருகிறாய்.?" என்று பாண்டியம்மாள் அவரை தட்டி கேட்டுள்ளார்.
தாய் மீது தாக்குதல் :
இதனால் கோபம் கொண்ட சிவசாமி வீட்டில் இருந்த மளிகை பொருட்கள், அரிசி உள்ளிட்டவற்றை தூக்கி விசிறி அடித்துள்ளார். இதை பார்த்ததும் மிகவும் ஆத்திரம் அதிகமாகிறது பாண்டியம்மாளுக்கு. உடனே இவ்வாறு ஏன் செய்கிறாய் என்று அவர் சத்தம் போட்டுள்ளார். எனவே கோபத்தின் உச்சத்தில் இருந்த சிவசாமி அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
திருப்பி அடித்த தாய் :
அப்போது தற்காத்துக் கொள்வதற்காக பாண்டியம்மாள் அருகில் இருந்த கற்கள், கட்டைகளை எடுத்து சிவசாமி மீது வீசியுள்ளார். இதில் சிவசாமிக்கு ரத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து இருக்கிறார். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பாண்டியம்மாளை கைது செய்துள்ளனர்.