இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
திடீரென அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு! ஜூன் வரை ஊரடங்கை நீடித்த சிங்கப்பூர் பிரதமர்!

சிங்கப்பூரின் கொரோனா கிருமித்தொற்று எண்ணிக்கை இந்தோனீசியாவையும் பிலிப்பீன்சையும் மிஞ்சி தற்போது தென்கிழக்காசியாவில் ஆக அதிகமாக உள்ளது. இந்தநிலையில், சிங்கப்பூரில், கொரோனா பரவலை தடுக்க, ஜூன், 1ம் தேதி வரை வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை சிங்கப்பூரில், 8,014 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11 பேர் பலியாகி உள்ளனர்.வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் பலர், சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர்.
சிங்கப்பூரில், பெரும்பாலோனோர் வெளிநாடுகளில் இருந்து வந்து வேலை செய்து வருகின்றனர். இவர்கள், மிக நெருக்கடியான விடுதிகளில், கூட்டமாக வசித்து வருகின்றனர். இதனால் அவர்களிடத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.இந்நிலையில், சிங்கப்பூரில், கொரோனாவை கட்டுப்படுத்த, மே 4 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், அங்கு கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது, சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில், 1,426 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, அந்நாட்டு பிரதமர், லீ சியன் லுாங், ஊரடங்கை, ஜூன், 1ம் தேதி வரை நீடித்துள்ளார்.