பாகிஸ்தானில் பயங்கரம்... பப்ஜி விளையாட்டிற்காக தாய், சகோதர, சகோதரிகள் கொலை.!! 14 வயது சிறுவன் வெறி செயல்.!!



14--year--old-boy-kills-family-under-pubg-influence-sen

பாகிஸ்தான் லாகூர் மாகாணத்தில் வசிக்கும் ஜைன் அலி என்ற 14 வயது சிறுவன் கடந்த 2022 ஆம் ஆண்டு பப்ஜி விளையாட்டில் அடிமையாகி அதிலிருக்கும் டார்கெட்டுகளை அடைய முடியாத போது கடும் மன உளைச்சலுக்கும் விரக்திக்கும் ஆளாகி இருந்திருக்கிறான்.

இவனது இந்த செயலை பார்த்து விளையாட்டில் அதிக நேரம் செலவழிக்காதே என அவனது தாயார் நாகித் முபாரக் கண்டித்துள்ளார். இதனால் அந்த சிறுவனுக்கு மேலும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. கோபத்தை கட்டுப்படுத்த முடியாத அந்த சிறுவன் வீட்டிலிருந்த கை துப்பாக்கியை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த தாயாரையும் தனது சகோதரன் தைமூர் (20), சகோதரிகள் மனூர்( 15 ), ஜன்னத் (10 ) ஆகிய மூவரையும் கொடூரமாக சுட்டுக் கொலை செய்துள்ளான்.

Pakistan

விசாரணையின் போது விளையாட்டின் மீது அவன் கொண்ட மோகமும் அடிமைத்தனமும் இந்த கொலைக்கு முக்கிய காரணம் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் குற்றவாளியாகிய ஜைன் அலிக்கு வயதை காரணமாக கொண்டு மரண தண்டனைக்கு பதிலாக ஒவ்வொரு கொலைக்கும் சுமார் 25 ஆண்டுகள் என மொத்தம் 100 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. மேலும் 4 மில்லியன் பாகிஸ்தான் ரூபாயை அபராதமாகவும் விதித்துள்ளது.

இதையும் படிங்க: தேனியில் பரபரப்பு.. 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.!! கூலி தொழிலாளிக்கு 4 வருடம் ஜெயில்.!!

இந்த கொலை சம்பவம் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் விளையாட்டுக்களால் குழந்தைகளுக்கு மூளையில் ஏற்படும் அடிமைத்தனம் மற்றும் ஆபத்தின் விளைவுகளை நம்மிடம் எடுத்துக்காட்டுகிறது. படிக்கும் வயதில் செல்போன் பயன்படுத்துவதை குழந்தைகள் தவிர்ப்பதே நல்லது.

இதையும் படிங்க: அடக்கொடுமையே... காப்பகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை.!! பாதிரியாருக்கு 7 ஆண்டு சிறை.!!