13 வயது சிறுவன் தந்தையான கொடுமை; 31 வயது பெண்ணின் காம இச்சையால் நடந்த விபரீதம்..!!

13 வயது சிறுவனுடன் 31 வயது பெண் ஒருவர் பாலியல் உறவு வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவர், கடந்த வருடம் 13 வயது சிறுவனுடன் பாலியல் உறவு வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தை சேர்ந்த ஆண்ட்ரியா செரானோ என்ற பெண், 13 வயது சிறுவன் ஒருவனுடன் நட்பாக பழகியுள்ளார். இந்த நட்பு நாளடைவில் நெருக்கத்தை அதிகரித்துள்ளது. ஒரு சமயத்தில் அந்த சிறுவனை கட்டாயப்படுத்தி ஆண்ட்ரியா செரானோ உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.
இதில் எதிர்பாராத விதமாக ஆண்ட்ரியா செரானோ கர்ப்பமானார். அவர் கர்ப்பமானவுடன் அந்த செய்தி வெளியே தெரிய ஆரம்பித்தது. 2022-ல் ஆண்ட்ரியா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். இந்நிலையில், அவரது வழக்கறிஞர்கள் மற்ற வழக்கறிஞர்களுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தனர்.
அதன்படி ஆண்ட்ரியா செரானோ குற்றத்தை ஏற்றுக்கொண்டதாக கூறப்பட்டது. கடந்த வருடம் கைது செய்யப்பட்ட பின்னர் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். 14 வயதாகும் அந்த சிறுவனின் தாய் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய சிறுவனின் தாய், என் மகனின் குழந்தைப் பருவம் பறிக்கப்பட்டது போல் உணர்கிறேன். இப்போது அவன் தந்தையாக வேண்டும். வாழ்நாள் முழுவதும் அவன் அதனுடனேயே வாழப் போகிறான் என்று உருக்கமாக கூறினார்.
மேலும் இந்த வழக்கில் பாலினம் தலைகீழாக மாற்றப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று சிறுவனின் தாய் கூறுகிறார்.
மேலும் அவள் ஒரு ஆணாகவும், அவன் சிறுமியாகவும் இருந்திருந்தால், அது வித்தியாசமாக இருக்கும் என்று நான் உணர்கிறேன். அவர்கள் அவள் மீது இரக்கம் காட்டுகின்றனர். என்ற பகிரங்கமாக குற்றச்சாட்டை சுமத்தினார்.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்து வருடம் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது அந்த பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், எந்தவித தண்டனையும் இன்றி விடுவிக்கப்படுகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.