கொரோனோவால் இளைஞர்களே அச்சப்படும் நேரத்தில், அசால்ட்டாக சம்பவம் செய்த 103 வயது பெண்.!

கொரோனோவால் இளைஞர்களே அச்சப்படும் நேரத்தில், அசால்ட்டாக சம்பவம் செய்த 103 வயது பெண்.!


103-years-old-lady-recovered-from-corono-in-iron

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 8000 த்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலும் 2 பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ள நிலையில் கொரோனோவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்ட வருகிறது.

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆகியுள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க, இந்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மக்கள் மத்தியில் பெரும் பீதி உருவாகியிருந்தாலும் மிகுந்த நம்பிக்கையும் எழுந்துள்ளது.

corono

இந்நிலையில், மக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில், ஈரானை சேர்ந்த 103 வயது மூதாட்டி ஒருவர் கொரோனோவில் இருந்து உயிர் பிழைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் உள்ள செம்னான் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 103 வயது பாட்டி சிகிச்சை முடிந்து முற்றிலும் குணமாகி வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

ஈரானில் கொரோனா பாதிப்பிலிருந்து மீளும் இரண்டாவது முதியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக, கெர்மான் பகுதியில் 91 வயதுடைய முதியவர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டிருந்தார்.