வீடியோ: எண்ணெய் கிணற்றுக்குள் விழுந்த நாய் குட்டி.! தலைகீழாக இறங்கி உயிரை பணயம் வைத்து மீட்ட சிறுவன்.!



10-years-old-boy-saved-puppy-from-oil-well-video-goes-v

துருக்கி நாட்டில், எண்ணெய் கிணற்றுக்குள் விழுந்த நாய் குட்டி ஒன்றை 10 வயது சிறுவன் கிணற்றுக்குள் தலைகீழாக இறங்கி அந்த நாய் குட்டியை காப்பாற்றிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைராலகிவருகிறது.

எனிஸ் டேய்லன் (Enes taylan) என்ற அந்த 10 வயது சிறுவன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது நாய் குட்டி ஒன்றின் சத்தம் கேட்டுள்ளது. சுற்றும் முற்றும் பார்த்த சிறுவன் நாய் குட்டி எங்கிருந்து கத்துகிறது என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. பின்னர், நாயின் குரல் கேட்கும் பகுதிக்கு சென்ற அந்த சிறுவன், எண்ணெய் கிணற்றுள் நாய் குட்டி கிடப்பதை கண்டுபிடித்தான்.

இதனை அடுத்து, தனது சக நண்பர்களின் உதவியுடன் அந்த நாய் குட்டியை காப்பாற்ற நினைத்த சிறுவன் எனிஸ், தனது நண்பர்கள் காலை இறுக்கி பிடித்துக்கொள்ள, தலைகீழாக கிணற்றுக்குள் இறங்கி அந்த நாய் குட்டியை காப்பாற்றியதோடு, அருகில் இருந்த குளத்திற்கு எடுத்துச்சென்று அந்த நாய் குட்டியை கழுவி சுத்தம் செய்துள்ளான்.

தனது உயிரையும் பொருட்படுத்தாமல், நாய் குட்டியை காப்பாற்றிய 10 வயது சிறுவனின் செயல் சமூக ஆர்வலர்கள் உட்பட அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றுவருகிறது.