ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
நாகம்-நாகினி உணர்ச்சி மிக்க காட்சி! உயிரிழந்து கிடந்த நாக பாம்பு! பரிதவித்து போய் தவிக்கும் நாகினி! வைரல் வீடியோ...
மனிதர்களின் வாழ்க்கையைப் போலவே, விலங்குகளின் வாழ்விலும் பாசம் மற்றும் இழப்பு போன்ற உணர்வுகள் வெளிப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தும் வீடியோ ஒன்று மத்தியப் பிரதேசத்தில் பரவியுள்ளது. இந்த காட்சி பலரின் மனதையும் உருக்கி, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
நாகம்-நாகினியின் வேதனைமிகு காட்சி
சிவபுரி பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோவில், நிலத்தில் உயிரிழந்த நாகத்தைச் சுற்றி அதன் துணைவி நாகினி துயரமடைந்து அலையும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கண்களில் தெரியும் வலி, பிரார்த்தனை செய்வது போல தோன்றும் அந்த தருணம் பார்ப்பவர்களின் இதயத்தை நெகிழச்செய்துள்ளது.
காதல் எல்லைகளற்ற உணர்வு
இந்தக் காட்சி "காதல் என்பது மொழி, இனம், வகை என எந்த எல்லைக்கும் உட்பட்டது அல்ல" என்பதை வலியுறுத்துகிறது. பாம்பு போன்ற புலனறிவு குறைந்த உயிரினங்களுக்கும் பாசம், இழப்பு, ஏக்கம் போன்ற உணர்வுகள் இருக்கும் என்பதை நாகினியின் செயல்கள் வெளிப்படுத்துகின்றன.
இதையும் படிங்க: இளங்கன்று பயமரியாதுனு சொன்னது உண்மை தான்.. ஓடும் பாம்பை கையில் பிடித்து விளையாடிய சிறுவன்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...
சமூக வலைதளங்களில் எதிர்வினைகள்
இந்த வீடியோவை @DanishgulJunaid என்ற பயனர் X தளத்தில் பகிர்ந்துள்ளார். ஆயிரக்கணக்கானோர் இதைப் பார்த்து தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். ஒருவர், "காதலியை இழந்தவுடன் ஒருவரின் மனநிலை எப்படி சிதைந்து விடுகிறது என்பதை இது காட்டுகிறது" எனக் கூறியுள்ளார். இன்னொருவர், "நாகம்-நாகினி ஜோடி இந்திய பாரம்பரியத்தில் உண்மையான காதலின் சின்னம். இன்று அதை நேரில் காணும் அனுபவம் கிடைத்தது" என பதிவிட்டுள்ளார். மேலும் சிலர், "இந்த நாகினி தன் துணையை இழந்ததால் பழிவாங்காமல் இருக்க மாட்டாள்" என கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ காதல், பாசம் மற்றும் உயிர்களின் மதிப்பு என்ற உண்மையை மீண்டும் ஒருமுறை மனிதர்களுக்கு நினைவூட்டுகிறது. அது மனிதர்களுக்கே அல்ல, இயற்கையில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் பொருந்துவதாகும்.
शिवपुरी : नाग की मौत के बाद भी पास बैठी रही नागिन: नरवर के ग्राम छतरी की घटना, सर्पमित्र ने बताया- लगभग 17 साल से साथ था जोड़ा pic.twitter.com/aisPkxLqIT
— Danish Gul Junaid (@DanishgulJunaid) January 2, 2025
இதையும் படிங்க: தண்ணீரில் நின்ற சிங்கக்குட்டியை சுற்றி வளைத்த முதலைகள்! பரிதவித்து நின்ற அம்மா! நொடியில் வந்து காப்பாற்றிய கழுகு! 12 விநாடி வீடியோ.....