AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
எல்லாம் நாசமா போச்சு! பசங்களுக்கு சோறு இல்ல! வயல்வெளியில் நின்று கதறிய அழும் விவசாயியின் மன வேதனை வீடியோ!
மகாராஷ்டிராவின் லாதூர் மாவட்டத்தில் நிகழ்ந்த துயர சம்பவம், விவசாயிகளின் வாழ்க்கை எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பதை வெளிக்காட்டியுள்ளது. கனமழையால் தன் பயிர்கள் அனைத்தையும் இழந்த ஒருவயதான விவசாயியின் வீடியோ தற்போது சமூகத்தில் பெரும் விவாதமாகியுள்ளது.
விவசாயியின் வேதனை
லாதூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு விவசாயி, கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் தன் நிலத்தில் தண்ணீர் புகுந்து அனைத்து பயிர்களும் அழிந்துவிட்டதாகக் கூறினார். தன் துயரத்தில், “என் நிலம் போச்சு, எல்லாம் நாசமாச்சு. பசங்களை எப்படி வாழ வைப்பேன்? எனக்கு உயிரோட இருக்க தேவையில்ல” என்று கதறி அழும் காட்சி இதயத்தை உருக்கும் வகையில் இருந்தது.
கண்ணீரில் மூழ்கிய நிலம்
நீரில் மூழ்கிய தன் வயலில் நின்றபடி அந்த விவசாயி, “என் வாழ்க்கை முடிஞ்சுடுச்சு. என் பசங்களுக்கு சாப்பாடு எங்கே கிடைக்கும்? என்னை வாழ விடாதீங்க” என்று சொல்லியபோது அருகில் இருந்த இளைஞர் ஒருவர் அவரை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் விவசாயியின் மனவேதனை சுற்றியிருந்த மக்களை கண்கலங்க வைத்தது.
இதையும் படிங்க: பாவம்ல.. என்னதா இருந்தாலும் அதுவும் ஒரு உயிர் தானே! மலைப்பாம்பை மனசாட்சியே இல்லாமல் பைக்கில் தரதரவென... வைரல் வீடியோ!
சமூக அதிர்வு
இந்த சம்பவம் தற்போது சமூக ஊடகம் முழுவதும் பரவி வருகிறது. “அரசாங்கம் என்ன கொடுக்கும்? என் பசங்க என்ன சாப்பிடுவாங்க?” என்ற விவசாயியின் கூச்சல் பலரது இதயத்தையும் பிளந்துள்ளது. உடனடி நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சமூகத்தில் எழுந்துள்ளது.
இந்த நிகழ்வு, இயற்கை பேரழிவுகள் எவ்வாறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், மனநிலையையும் சிதைக்கும் என்பதை தெளிவாக காட்டுகிறது. அரசாங்கம் விரைந்து உதவி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உயர்ந்து வருகிறது.
‘सब बह गया, मैं जी कर क्या करूं…’
महाराष्ट्र के लातूर जिले से एक वीडियो सामने आया है जिसमें बाढ़ में फसल बर्बाद होने से एक किसान आत्महत्या करने की जिद करता नजर आ रहा है. वायरल वीडियो में किसान पानी भरे खेत में बिलख रहा है. वो कह रहा है, “सब बह गया, मुझे मर जाने दो, जी कर क्या… pic.twitter.com/ddPpxOnaLd
— NDTV India (@ndtvindia) August 30, 2025
இதையும் படிங்க: திக் திக் நிமிட காட்சி! நடுரோட்டில் லாரி மோதி சக்கரத்தின் அடியில் சிக்கிய பெண்! நொடியில் நடந்த அதிஷ்டத்தை பாருங்க! பதறவைக்கும் காட்சி...