குடும்பி பிடி சண்டை! ரயிலில் பண்டிகைக் கூட்ட நெரிசலில் பெண்களிடம் நடந்த அநாகரீகம்! அனைவரையும் கோபப்படுத்திய 10 விநாடி வீடியோ....
இந்திய ரயில்களில் பாதுகாப்பு குறைவால் பொதுமக்கள் சந்திக்கும் அவல நிலையை ஒளிப்படமாக காட்டும் இன்னொரு சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் கூட்ட நெரிசல் எப்படி கட்டுப்பாட்டை மீறுகிறது என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
கூட்ட நெரிசலில் பெண்களுக்கு துன்புறுத்தல்
டெல்லியிலிருந்து பீகாருக்குச் செல்லும் ரயிலில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்டத்தின் மத்தியில், இரண்டு பெண்கள் ரயிலின் படுக்கை பகுதியில் ஏறி அமர முயன்ற காட்சியில், கீழே இருந்த சில ஆண்கள் இடம் பிடிக்கும் நோக்கில் அவர்களைப் பிடித்து இழுக்க முயன்றதை காணலாம். இந்த அநாகரிகமான செயல் சமூக வலைதளங்களில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் ரயில் சம்பவம் வைரல்
பண்டிகை கால கூட்ட நெரிசலை தவறாக பயன்படுத்தி பெண்களை நோக்கி அவமானகரமான முயற்சி நடந்ததாக காட்சியில் தெரிகிறது. முழுப் பெட்டியிலும் குழப்பம் நிறைந்த நிலையில் இருந்த இந்த வீடியோவை Instagram-ல் @NazneenAkhtar23 கணக்கு 'ரயிலில் மகாபாரதம் ஆரம்பித்துவிட்டது' என்ற விளக்கத்துடன் பகிர்ந்து, சில நொடிகளில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பாவம்ல.. என்னதா இருந்தாலும் அதுவும் ஒரு உயிர் தானே! மலைப்பாம்பை மனசாட்சியே இல்லாமல் பைக்கில் தரதரவென... வைரல் வீடியோ!
பயனர்கள் கேள்வி – ரயில்வே காவலர்கள் எங்கே?
இந்த வன்முறைச் சம்பவம் குறித்து பயனர்கள் கடும் கேள்வி எழுப்பியுள்ளனர். ரயில்வே காவலர்கள் ஏன் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்று பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது பெண்களின் பாதுகாப்பைக் குறித்தும், ரயில்வே நிர்வாகத்தின் செயலிழப்பைப் குறித்தும் கவலைக்குரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் தடுக்க ரயில்வே பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் உயரும் நிலையில் உள்ளது.
ये लो ट्रेन में ही महाभारत शुरू हो गया अब,,
देख लीजिए बिहार के लोगों के हालात,, pic.twitter.com/LiMlFG7xE5
— Adv.Nazneen Akhtar (@NazneenAkhtar23) October 20, 2025
இதையும் படிங்க: பார்க்கும்போதே பதறுதே! ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்! நொடியில் வந்த முதலை! பெண்ணை தண்ணீருக்குள் இழுத்து.... திக் திக் காட்சி!