ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
அட...இவருக்கு என்னாச்சு! குழந்தையை பக்கத்தில் வைத்து தலைமுடிக்கு தீ வைத்த தந்தை! இறுதியில் என்ன பன்றாருன்னு பாருங்க! திகில் வீடியோ காட்சி...
இன்றைய காலக்கட்டத்தில், அழகுக்காக ஆபத்தான முயற்சிகளை மேற்கொள்வது ஓரளவிற்கு சாதாரணமாகிவிட்டது. சமூக வலைதளங்களில் தலைமுடிக்கு தீவைத்து அலங்கரிக்கும் காட்சி வைரலாகி, பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தீயால் முடி வெட்டும் அதிர்ச்சி வீடியோ
ஒரு நபர், எரியும் தீக்குச்சியைத் தனது தலைமுடிக்கு நெருக்கமாகக் கொண்டு சென்று, அதைத் தொட வைத்துத் தீயில் முடியை வெட்டுகிறார். இந்த வீடியோவைக் கண்ட பலரும் இது அழகு அலங்காரம் அல்ல, உயிருக்கு ஆபத்து என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
வலைதளங்களில் பரவிய பரபரப்பான வீடியோ
"reveriekeona" என்ற பயனர் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ஆயிரக்கணக்கானோர் லைக் அளித்து, லட்சக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர். "இது ஃபேஷனா அல்லது உயிரை ஆபத்துக்குள்ளாக்குற வீடியோவா?", "இது முடி வெட்டுறதா அல்லது உயிரை வெட்டுறதா?" என்கிற விமர்சனங்கள் சமூக வலைதளங்களை சூடேற்றுகின்றன.
இதையும் படிங்க: ரீல்ஸ் மோகம்.. பைக் பெட்ரோல் டேங்கில் மனைவிகளை அமர வைத்து பயணம் செய்த வாலிபர்கள்- வைரலாகும் வீடியோ.
மருத்துவ மற்றும் சிகை நிபுணர்கள் எச்சரிக்கை
சமீபத்தில் இவை போன்ற தீ வைக்கும் சிகை அலங்காரங்கள் பரவலாக நடைமுறையில் இருக்கின்றன. இதனால் பலரும் ஆபத்தில் சிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது. மருத்துவ நிபுணர்களும், சிகை அலங்கார நிபுணர்களும் இதனை கடுமையாக கண்டிக்கின்றனர். "இவை உடல்நலத்துக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது" என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
அழகு சோதனைகள் செய்யும் முன் அதன் ஆபத்துக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். சின்ன தவறுகள் கூட உயிரைப் பாதிக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தக்கூடும் என்பதனை உணர்ந்து செயல்படுவது அவசியம்.
Ghost Rider 😭 pic.twitter.com/uO2uIPwI8L
— reverie keona (@reveriekeona) July 25, 2025
இதையும் படிங்க: ஸ்கூட்டரில் பால் வாங்க சென்ற 71 வயது முதியவர்! வீடு திரும்பும் போது பேருந்து மோதி! அடுத்து நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம்! பதறவைக்கும் வீடியோ!