பைக் ஓட்டிக் கொண்டே ஸ்டண்ட் ரீல்ஸ் எடுக்க முயன்ற இளைஞர்! அடுத்தகணமே நடந்த பதறவைக்கும் வீடியோ காட்சி...



bike-stunt-accident-viral-video

சமூக வலைதளங்களில் தினமும் எண்ணற்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அதில் சில வீடியோக்கள் ரசனைக்கு உரியவை, சில விடியோக்கள் மிகுந்த கவலையையும் மனஅழுத்தத்தையும் ஏற்படுத்துவனவாகவும் இருக்கின்றன. இந்நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வைரலாகிய ஒரு பைக்கர் விபத்து வீடியோ பலரது மனதையும் உலுக்கியுள்ளது.

‘ranjeetraiderr15’ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ஒரு இளைஞர் தனது பைக்கை வேகமாக ஓட்டி ஸ்டண்ட் செய்ய முயற்சிக்கிறார். அவரின் நண்பர் அந்த ஸ்டண்ட் நிகழ்வை வீடியோவாக பதிவுசெய்து கொண்டிருந்தார். ஆனால் சில வினாடிகளில் அந்த இளைஞர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருண்டு விழுகிறார். வீடியோவில் காணப்படும் அந்த விழுதல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

நெட்டிசன்கள் கருத்து

இந்த காணொளியை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியுடன் தங்கள் கவலையை தெரிவித்து வருகின்றனர். இது போன்ற நிகழ்வுகள், சாலையில் வாகனம் ஓட்டும்போது சிறிய தவறுகள் கூட பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகின்றன.

இதையும் படிங்க: Video : ஓடும் பைக்கில் கணவனை செருப்பால் அடித்த மனைவி! என்னா அடி அடிக்குறாங்க பாருங்க! வைரலாகும் காணொளி...

அதிக வேகம், கட்டுப்பாடற்ற ஓட்டம் மற்றும் ஸ்டண்ட் செய்யும் பழக்கங்கள் இன்றைய இளைஞர்களிடையே வளர்ந்து வருகிறது. சமூக வலைதளங்களில் பிரபலமாகும் ஆசையில், பலர் தங்கள் உயிரையே பனையம் செய்கிறார்கள். இது குறித்து அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துவரும் நிலையிலும், பாதுகாப்பை புறந்தள்ளும் செயல்கள் தொடர்கின்றன.

இதையும் படிங்க: Video : நொடிக்குள் வந்த எமன்! வீட்டு கேட்டை திறந்து வெளியே வந்த நபரை அடித்து தூக்கிய ஸ்கூட்டர்! வைரலாகும் அதிர்ச்சி காணொளி...