அப்பாடா.. இனி அந்த கவலையே இல்ல.. வாட்ஸாப்பில் அறிமுகமாகும் புதிய வசதிகள்!

அப்பாடா.. இனி அந்த கவலையே இல்ல.. வாட்ஸாப்பில் அறிமுகமாகும் புதிய வசதிகள்!


whatsapp-about-to-launch-3-new-options-sooner

வாட்ஸாப்பில் அறிமுகமாகவுள்ள 3 புதிய வசதிகள் குறித்து அதன் சிஈஓ மார்க் சூசன்பர்க் கூறியுள்ளார்.

வாட்ஸாப்பில் பல வசதிகள் வாடிக்கையாளருக்கு உதவியாக இருந்தாலும் ஒருசில வசதிகள் சற்று எரிச்சலை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இதில் முக்கியமானது பழைய மெசேஜ்களை அழிப்பது, வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படங்களால் சேமிப்பு திறன் குறைவது போன்ற சிரமங்கள் இருந்து வருகின்றன.

Whatsapp

இதனை சரி செய்ய வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறையும் தானாக சென்று மீடியா தரவுகளை அழிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. தற்போது இந்த சிரமங்களை போக்கும் வகையில் புதிய வசதிகளை வாட்ஸாப்பில் அறிமுகம் செய்ய உள்ளதாக அதன் நிறுவன தலைவர் மார்க் சூசன்பர்க் தெரிவித்துள்ளார்.

வசதி 1: மெசேஜ் தானாக மறையும் வசதி (disappearing mode). இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதால் வாட்ஸாப் மெசேஜ்கள் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு தானாகவே அழிந்துவிடும்.

வசதி 2: ஒருமுறை மட்டுமே பார்ப்பது (view once). இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் போது வீடியோ மற்றும் புகைப்படங்களை ஒருமுறை திறந்து பார்த்தவுடன் தானாகவே அழிந்துவிடும். முக்கியமான தரவுகளை சேமிக்க விரும்பினால் ஸ்கிரீன் ஸாட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வசதி 3: ஒன்றுக்கு மேற்பட்ட கருவி (multi device support). இந்த வசதியின் மூலம் ஒரு வாட்ஸாப் கணக்கினை ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கருவிகளில் பயன்படுத்தலாம். இதற்கு முதன்மை கருவியில் இணையதள வசதி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த வசதிகள் அனைத்தும் தற்போது வாட்ஸாப் பீட்டா பயனாளர்கள் மூலம் சோதனையில் இருப்பதாகவும் விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.