FIFA 50 GB ஃப்ரீ டேட்டா கொடுக்கிறதா?.. வைரலாகும் வாட்சப் செய்தியை நம்பி ஏமாறவேண்டாம் மக்களே.. உஷார்.!

FIFA 50 GB ஃப்ரீ டேட்டா கொடுக்கிறதா?.. வைரலாகும் வாட்சப் செய்தியை நம்பி ஏமாறவேண்டாம் மக்களே.. உஷார்.!



Viral WhatsApp Info About FIFA 50 GB Free Recharge Fraud Scam

 

இன்றளவில் உள்ள தொழில்நுட்ப உலகத்தில் என்றுமே போலியான செய்திகளுக்கும், அதனை வைத்து திருட்டு செயலில் ஈடுபடுபோவோருக்கும் பஞ்சமே இருக்காது. இந்த லிங்கை கிளீக் செய்யுங்கள் பணம் சம்பாதிக்கலாம், வீட்டில் இருந்து படுத்துக்கொண்டே 2 மணிநேர வேலைக்கு ரூ.5 ஆயிரம் நாளொன்றுக்கு சம்பளம் என தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 

இந்த சம்பவங்கள் ஒருபுறம் இருந்தால், வாட்சப் செயலிகளில் இந்த செய்தியை 10 பேருக்கு அனுப்புங்கள் நல்ல செய்தி கிடைக்கும் என ஒரு தகவல் வேறு உலாவும். அதையெல்லாம் கடந்து செல்லும் போது, எங்கோ நடைபெறும் போட்டியை வைத்து ஜியோ ஓனர் பிரீ ரீசார்ஜ் ஆப்சன் கொடுத்துள்ளார், இந்த லிங்கை 10 பேருக்கு அனுப்பிவிட்டு கிளிக் செய்து பாருங்கள் என்று பகல் வித்தை காண்பிக்கும் போலி செய்திகள் உலவுகிறது. 

தற்போது, சவுதியில் பிபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெறும் நிலையில், அதனை வைத்து வாட்ஸாப்க்களில் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, "FIFA உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு 2022 கார்டெல் உலகக் கோப்பையைப் பார்க்க 50 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது.

FIFA 2022

நான் என்னுடையதைப் பெற்றேன்.இதைத் திறக்கவும் https://answer 270.xyz/?y=ep1 66918 1861" என ஒரு லிங்கும் வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் பலரும் என்னமோ கடவுள் கூரையை பிய்த்துக்கொண்டு கோடிகளை குவிப்பர் என்ற எண்ணத்தில் பகிர்ந்து திறந்து வருகின்றனர். இவை அனைத்தும் போலியான செய்தியை அனுப்பி மக்களின் கவனத்தை பெரும் சைபர் குற்றவாளிகளின் நுணுக்கங்கள் ஆகும்.

நாம் அந்த லிங்கை கிளீக் செய்ததும் ஒன்று அவர்கள் நமது சாதனத்தை ஹேக்கிங் செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அவை நடக்காத பட்சத்தில், நமது ஈ-மெயில், போன் நம்பர் உட்பட பிற விபரங்கள் அவருக்கு கிடைக்கும். அதனை வைத்து மோசடியாக உள்ள பல விளம்பரங்களின் குறுஞ்செய்திகள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆகையால் இலவசம் என்ற ஆசை வலையில் சிக்கி ஏமாற வேண்டாம்.