நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
மீனா செய்த செயலால் அதிர்ச்சியில் விஜயா! அம்மாவுக்காக முதல்முறையாக பேசிய முத்து! சிறகடிக்க ஆசை புது ப்ரோமொ காட்சி...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது பரபரப்பாக நகர்கிறது. தொடர்ந்து விஜயா, முத்து மற்றும் மீனா மீது பல்வேறு அவமானங்களை மழையாய் கொட்டிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக, மீனாவின் குடும்பத்தை குறைத்து பேசும் விஜயாவின் நடவடிக்கைகள் ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விஜயா நடத்திய நடன வகுப்பில் பயிலும் பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுகிறார். பின்னர், அந்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததும், அவரது குடும்பத்தினர் விஜயா வீட்டில் வந்து வாக்குவாதம் செய்கிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தில், விஜயாவை தாக்க ஒரு பெண் முயற்சி செய்யும் போது, மீனா விஜயாவை காப்பாற்றுகிறார். இதை தொடர்ந்து முத்துவும் தனது அம்மாவுக்காக நின்று வாதாடுகிறார்.
இதையும் படிங்க: அய்யோ.. சிறகடிக்க ஆசை சீரியலில் இவர் இறந்துவிடுகிறாரா! இனி குடும்பத்தின் நிலை என்ன! பரபரப்பான திருப்பங்களுடன்...
இந்த உணர்ச்சி நெஞ்சை தொடும் காட்சிகள் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பார்வையாளர்கள் இது பற்றிய விமர்சனங்களை எதிர்நோக்குகிறார்கள்.