எலான் மஸ்கின் திடீர் கெடுபிடி; கொந்தளிக்கும் பயனர்கள்.. ட்விட்டர் இறந்துவிட்டதாக துக்கம் அனுசரிப்பு.!

எலான் மஸ்கின் திடீர் கெடுபிடி; கொந்தளிக்கும் பயனர்கள்.. ட்விட்டர் இறந்துவிட்டதாக துக்கம் அனுசரிப்பு.!



Twitter May Died After Elon Musk Announcement Post Restriction 

 

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கியஸ்தர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த வெரிஃபைடு ஐடி பணத்திற்கு கீழ் கொண்டுவரப்பட்டது. 

பலரும்  வெரிஃபைடு ஐடியை வாங்கி உபயோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 2 மணிநேரத்திற்கு மேலாக ட்விட்டர் முடங்கியது. 

Technology news

அதேபோல நாளொன்றுக்கு ட்விட்டர் ப்ளூடிக் பயனர்கள் 6000 பதிவுகளையும், ப்ளூடிக் இல்லாத பயனர்கள் 600 பதிவுகளையும், புதிய பயனர்கள் 300 பதிவுகளை மட்டுமே பார்க்க இயலும் என்று எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த பையனர்கள் #RIPTwitter என்ற  ஹேஸ்டெக்குடன் ட்விட்டர் இறந்துவிட்டதாக ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.