இளைஞர்களின் செல்போனில் கழிப்பறை இருக்கையை விட நிரம்பி வழியும் பாக்டீரியா.. ஆராய்ச்சியில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இளைஞர்களின் செல்போனில் கழிப்பறை இருக்கையை விட நிரம்பி வழியும் பாக்டீரியா.. ஆராய்ச்சியில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!


mobile-phoone-virus

அமெரிக்காவின் அரிஸானா பல்கலைகழகத்தில் நடைபெற்ற ஆய்வில் இளைஞர்களின் மொபைலில் அதிகளவிலான பாக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று நாம் செல்போனை அத்தியாவசிய பொருளாக உபயோகம் செய்துவருகிறோம். பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை என செல்போன் இல்லாத ஆட்களே இல்லை. எந்த நேரமும் கைகளில் செல்போனை வைத்து உபயோகம் செய்கிறோம். 

அது மட்டுமல்லாது சில நேரங்களில் அவசர கதியில் அதனை நமது பாணியில் வாயில் கவ்விபிடித்து, பின்னர் அதனை அப்படியே நாம் உபயோகம் செய்கிறோம். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள அரிஸோனா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் பேரதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

Mobile phone

அதாவது செல்போனில் இருக்கும் கிருமிகள் தொடர்பாக அந்த ஆய்வு நடைபெற்றது. அந்த ஆய்வின் முடிவாக செல்போன்களில், கழிவறையின் இருக்கையை விட 10% அதிகமான பாக்டீரியா இருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது. 

மேலும் இளைஞர்களின் செல்போனில் குறைந்தது 17,000-க்கும் அதிகமான பாக்டீரியாக்கள் இருப்பதாகவும் ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலானது இளைஞர்கள் மற்றும் செல்போன் உபயோகிப்பாளர்களிடையே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.