பயணங்களின் போது நமது செல்போனை பாதுகாப்பது எப்படி?; அசத்தல் டிப்ஸ் இதோ.!

பயணங்களின் போது நமது செல்போனை பாதுகாப்பது எப்படி?; அசத்தல் டிப்ஸ் இதோ.!



mobile-phone-safe

 

இன்றளவில் செல்போன் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. நாம் வெளியே செல்லும்போதும், எப்போதும் நமது செல்போனை கையில் தூக்கி கொண்டே சுற்றிவருகிறோம். 

செல்போனை நமக்கு தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்திவிட்டு, பிற நேரத்தில் அதனை பத்திரமாக நமது பாக்கெட்டிலோ அல்லது கைப்பையில் வைப்பது நல்லது. 

தனியாக நடந்து செல்லும் நேரத்தில் வண்டியை நிறுத்தி போன் பேசும்போதும், பயணத்தில் இருக்கும் போதும் செல்போன்கள் பெரும்பாலானவை பறிக்கப்படுகின்றன. 

இந்த நேரத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். நாம் செல்போன் பேச நிற்கும் இடம் பாதுகாப்பானதா? அல்லது பாதுகாப்பு இல்லாததா? என்பதை உறுதி செய்து செல்போனை வெளியே எடுக்கலாம். 

Smartphone

எந்த ஒரு அழைப்பு வந்தாலும் வண்டி ஓடிக்கொண்டிருக்கும் போது கட்டாயம் அதனை ஏற்க வேண்டாம். வண்டியை நிறுத்திவிட்டு செல்போன் பேசலாம். 

சாலையில் நடந்து செல்லும் நேரத்தில் மெசேஜ் செய்வது, சாட் செய்வது போன்றவை கூடாது. தனியாக இருக்கும்போது யாரும் அவசரம், போன் பேசிவிட்டு தருகிறேன் என்று கேட்டால் தயங்காமல் மறுக்கலாம், 

ரயில் பயணத்தின் போது ஜன்னல் வழியே இயற்கையை போட்டோ எடுக்கிறேன் என்ற பெயரில், செல்போனை வெளியே நீட்டினால் அது தவறி விழுவதற்கோ அல்லது பறிக்கப்படுவதற்கோ வாய்ப்பு அதிகம். 

அதேபோல கதவருக்கு நின்று பயணம் செய்ய நேரிட்டால், அப்போதும் செல்போனை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். நமது செல்போன் பறிக்கப்படும் பட்சத்தில், ஆபத்தில் மாட்டாமல் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது சரியானதாக இருக்கும்.