இனி செல்போனிலேயே பாஸ்போர்ட் சைஸ் போட்டோ நொடியில் ரெடி.! ஸ்டுடியோவிற்கு பை சொல்லுங்க.!



making-passport-size-photo-using-gemini-ai

அதிகாரப்பூர்வ ஆவணங்கள், வேலைவாய்ப்பு விண்ணப்பம், தேர்வு பதிவு போன்றவற்றுக்கு திடீரென பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் தேவைப்படும் நிலை அடிக்கடி வரும். அப்போது, அவசர அவசரமாக முகம் எண்ணெய் வழிந்த நிலையில் ஸ்டூடியோவிற்கு சென்று புகைப்படம் எடுக்க வேண்டிய சங்கடம் பலருக்கும் இருக்கும். ஆனால் இனி அந்த அவசரம் வேண்டாம். 

ஜெமினி ஏஐயை (Gemini AI) பயன்படுத்தி நம் மொபைலில் ஏற்கனவே உள்ள சாதாரண புகைப்படத்தை மிக அழகாக பாஸ்போர்ட் சைஸ் புகைப்படமாக மாற்றிக் கொள்ளலாம். ஜெமினி ஏஐ தற்போது பல்வேறு வகை பட உருவாக்க மற்றும் எடிட்டிங் வசதிகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்றாக, ‘பாஸ்போர்ட் போட்டோ ஜெனரேட்டர்’ போன்ற திறனை தற்போது பலர் பயன்படுத்தி வருகின்றனர். சில நிமிடங்களில் முகத்தை தெளிவாகவும் பின்னணியை சுத்தமாகவும் ஆக்கி, அதிகாரப்பூர்வ தரத்துக்கு ஏற்ற புகைப்படத்தை உருவாக்கிவிடுகிறது.
பயன்படுத்தும் முறையும் எளிதுதான்.

passport size photo

முதலில் ஜெமினி ஆப்பை திறந்து, “Create Image” என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து “Upload Photo” என்பதைக் கிளிக் செய்து உங்களுடைய சிறந்த புகைப்படத்தை அப்லோடு செய்யுங்கள். பின்னர், கீழே கொடுக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் போட்டோ பிராம்ப்டை (Prompt) அப்படியே பேஸ்ட் செய்து ‘OK’ அழுத்துங்கள். சில நொடிகளில் உங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தயாராகி வரும்.
உருவாக்கப்பட்ட புகைப்படத்தை டவுன்லோட் செய்து, அருகிலுள்ள எந்த ஒரு பிரிண்ட் சென்டரிலும் பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம். 

இது ஸ்டூடியோவிற்கு செல்லும் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துகிறது. முக்கியமாக, முகத்தின் இயல்பை குலைக்காமல், சுத்தமாகவும் நேர்த்தியாகவும் உருவாக்கப்படுவதாக பயனர்கள் திருப்தி தெரிவிக்கின்றனர். டிஜிட்டல் வசதிகள் வேகமாக வளர்ந்துள்ள இந்நேரத்தில், ஜெமினி ஏஐயின் இந்த எளிய தொழில்நுட்பம், அனைவருக்கும் விரைவான மற்றும் அழகான பாஸ்போர்ட் புகைப்படம் உருவாக்கும் புதிய வழியாக மாறியுள்ளது. இனி புகைப்படத்திற்காக ஸ்டூடியோக்கு ஓட வேண்டிய அவசியமே இல்லை., உங்கள் மொபைலே, உங்கள் ஸ்டூடியோ.

Prompt : Prompt of Passport Photos✨🫰
{"description": "Ultra-realistic passport-size photo of me (exact face likeness, 100% match, no facial changes).",
"style": "Professional studio portrait suitable for official ID or passport use.",
"outfit": " white coller shirt and matching tie with branded modern ",
"expression": "Neutral closed-lip smile, straight look, both ears visible, shoulders included."