#Breaking: முதல் சூரிய ஒளிப்பிழம்பை பதிவு செய்தது ஆதித்யா எல்1 - இஸ்ரோ அறிவிப்பு.!

#Breaking: முதல் சூரிய ஒளிப்பிழம்பை பதிவு செய்தது ஆதித்யா எல்1 - இஸ்ரோ அறிவிப்பு.!



ISRO Announce Aditya L1 Capture Sun Light First Beam 

 

சூரியன் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஆதித்யா எல்1 செயற்கைகோள், கடந்த 2 செப். 2023 அன்று விண்ணில் ஏவப்பட்டது. 

16 நாட்கள் புவியை சுற்றி விண்வெளிக்குள் நுழைந்த ஆதித்யா, தொடர்ந்து சூரியனை நோக்கி பயணித்து வந்தது. இந்நிலையில், சூரியனின் ஒளிப்பிழம்பை ஆதித்யா எல்1 படம்பிடித்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

3 மாதங்கள் 10 இலட்சம் கி.மீ பயணம் செய்த ஆதித்யா எல்1 தனது முதல் ஆய்வை மேற்கொண்டு பூமிக்கு தகவல் வழங்கியுள்ளது. பூமிக்கும் - சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவில் உள்ள நிகழ்வுகள் மற்றும் சூரிய கதிர்களில் உள்ள எலக்ட்ரான் அணுக்களையும் ஆய்வு செய்ய பயணம் தொடருகிறது.