கூகுள் பிளே ஸ்டோரில் 17 கடன் மோசடி செயலிகள் நீக்கம்: உங்க ஸ்மார்ட்போனில் இந்த செயலிகள் இருக்கா?.. உஷார்.!

கூகுள் பிளே ஸ்டோரில் 17 கடன் மோசடி செயலிகள் நீக்கம்: உங்க ஸ்மார்ட்போனில் இந்த செயலிகள் இருக்கா?.. உஷார்.!


Google Play Store Remove online Scam Loan Apps List 8 Dec 2023 

 

கூகுள் நிறுவனம் தனக்கு வாடிக்கையாளர்கள் மற்றும் அரசிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத்தொடர்ந்து, தனது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து கடன் கொடுத்து மோசடி செய்யும் 17 செயலிகளை அதிரடியாக நீக்கி இருந்தது. 

இந்த செயலிகள் பயனரின் தனிப்பட்ட தரவுகளை சேகரிப்பது, அதனை வைத்து மிரட்டுவது, 90 நாட்கள் கடனை 5 நாட்களில் செலுத்தசொல்லி மிரட்டுவது, ஆபாசமாக போட்டோக்களை சித்தரித்து மிரட்டுவது உட்பட பல புகார்களை சந்தித்தன. சிலர் ஆன்லைன் கடன் மோசடி காரணமாக தற்கொலையும் செய்துகொண்டனர். 

இந்நிலையில், கூகுள் தான் நீக்கம் செய்த செயலிகள் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இந்த செயலிகள் உங்களின் ஸ்மார்ட்போனில் இருந்தால், அதனை அடையாளம் கண்டு நீக்குமாறும், பாதிக்கப்பட்டவராக இருப்பின் சட்டபூர்வ நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி, AA Kredit, Amor Cash, Guayaba Cash, Easy Credit, Cash wow, Credi Bus, Flash Loan, Préstamos Crédito, Go Crédito, Cartera Grande, Rápido Crédito, Finupp Lending, 4S Cash, True Naira, Easy Cash, Instantáneo Préstamo, Préstamos De Crédito-YumiCash ஆகிய செயலிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.