ஆண்ட்ராய்டு போன் பயன் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கே தெரியாமல் உங்கள் போனில் நடக்கும் மர்மங்கள்!

ஆண்ட்ராய்டு போன் பயன் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கே தெரியாமல் உங்கள் போனில் நடக்கும் மர்மங்கள்!



google-facing-new-issue-on-google-location-service

தகவல் தொழிநுட்ப துறையின் மாபெரும் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது கூகுள் நிறுவனம். இன்று அணைத்து தரப்பட்ட மக்களும் தங்களது தேவைகளை கூகுள் மூலம் தெரிந்துகொள்கின்றனர்.

மக்களுக்கு பல சேவைகளை வழங்கும் கூகிளின் மிக முக்கியமா சேவைதான் 
இருப்பிடத்தினை அறிந்துகொள்ளும் Location சேவையும் ஆகும். இதன் மூலம் மக்கள் தங்களுக்கு தெரியாத இடங்களை இந்த சேவை மூலம் எளிதில் கண்டுபிடித்து அங்கு செல்ல முடியும்.

 

Google location map

இந்நிலையில், இச் சேவை Off நிலையில் இருக்கும் போதும் கூகுள் நிறுவனத்தினால் அறிந்துகொள்ள முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நீங்கள் இருக்கும் இடம் உங்கள் அனுமதி இன்றி கூகுள் நிறுவனத்தினால் கண்டறிய முடியும்.

செய்தி நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கூகுளின் அன்ரோயிட் பயனர்களே இச் சதிவலைக்குள் அகமாக சிக்கியுள்ளனர்.

இதேபோன்று ஆப்பிள் நிறுவனமும் இவ்வாறு பயனர்களின் இருப்பிடங்களை அறிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை அனுமதியின்றி பயன்படுத்துவது தொடர்பாக முன்னணி நிறுவனங்கள் சட்ட ரீதியான சிக்கல்களை எதிர்நோக்கி பெருமளவில் அபராதம் செலுத்தியுள்ளது.

இந்த தகவலை அடுத்து கூகுள் நிறுவனம் சட்ட ரீதியாக நடவடிக்கை எதிர்பார்த்து காத்திருக்கின்றது.