பக்கவாதத்தால் பாதிக்கப்ட்டவரின் மூளையில் சிப்; இயக்கப்பட்ட மின்னணு சாதனைகள்.. எலான் மஸ்க் சோதனை வெற்றி.!

பக்கவாதத்தால் பாதிக்கப்ட்டவரின் மூளையில் சிப்; இயக்கப்பட்ட மின்னணு சாதனைகள்.. எலான் மஸ்க் சோதனை வெற்றி.!


Elon Musk Neuralink Success 

 

அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம், மனிதர்களின் மூளையில் சிப் பொருத்தி மூளையின் செயல்பாட்டை பயன்படுத்தி ஸ்மார்ட் பொருட்களை உபயோகம் செய்யும் முறை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. 

இந்நிலையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபரின் மூளைக்குள் சிறிய அளவிலான சிப்பை பொருத்தி, அவரது மூளை சமிக்கையின் பெயரில் ஃபோன் மற்றும் கம்ப்யூட்டர் ஆகிய சாதனங்களை சிந்திப்பின் மூலமாக இயக்க வைக்கும் முயற்சியில் வெற்றி அடைந்துள்ளது. 

சோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளி நல்ல முறையில் உடல்நலம் பெற்று தேறி வருவதாகவும் எலான் மஸ்க் எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.